ரூ.10,999 மட்டுமே: ரெட்மி 9 பவர் 6000 mAh பேட்டரி, 48 மெகாபிக்சல் கேமராவோடு அறிமுகம்!

|

சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகம்

சியோமி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.10,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.11,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 22 முதல் கிடைக்கும்

டிசம்பர் 22 முதல் கிடைக்கும்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் அமேசான்.காம், எம்ஐ.காம் மற்றும் எம்ஹோம் ஸ்டோர்ஸ் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 22 முதல் பயனர்கள் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் மைட்டி பிளாக், ஃபியரி ரெட், எலெக்ட்ரிக் க்ரீன் மற்றும் ப்ளேஜிங் பச்சை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதில் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்: 2021 முதல் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது!வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்: 2021 முதல் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது!

64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகள்

64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகள்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதிகளில் கிடைக்கும். இதில் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

பின்புறத்தில் மூன்று கேமராக்கள்

சியோமி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 9 Power Launched in India with 6000 mAh Battery, 48 Mp Primary Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X