விரைவில் 6ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி விரைவில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன்

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விரைவில் 6ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

அதன்படி 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட் விலை ரூ.10,999 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.11,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனானது அமேசான் மற்றும் எம்.காம் மூலமாக விற்பனைக்கு கிடைக்கிறது. அதேபோல் ஆஃப்லைன் தளங்கள் என்று பார்க்கையில் எம்ஐ ஹோம், எம்ஐ ஸ்டூடியோ மற்றும் எம்ஐ ஸ்டோர்களில் ரெட்மி 9 பவர் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் மைட்டி

பிளாக், ஃபியரி ரெட், எலெக்ட்ரிக் க்ரீன் மற்றும் ப்ளேஜிங் பச்சை வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

விரைவில் 6ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. இதில் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பொருத்தப்பட்டுள்ளது.

இதில் ஸ்னாப்டிராகன் 662 செயலி மூலம் இயக்கப்படுகிறது. மெமரி விரிவாக்க வசதிக்கு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

விரைவில் 6ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

சியோமி ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில்

8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

விரைவில் 6ஜிபி ரேம் வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் அதை சார்ஜ் செய்வதற்கு 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது டூயல் 4ஜி வோல்ட்இ ஆதரவு, ப்ளூடூத் 5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 9 Power 6GB RAM Variant May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X