128ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 128ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9.!

இந்நிலையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் இந்த சாதனத்தின் வடிமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 128ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியுடன் உடன் மாலி ஜி52 ஆதரவைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சதாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்
செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 128ஜிபி மெமரி வசதியுடன் களமிறங்கும் ரெட்மி 9.!

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் அடக்கம்.

4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்),யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi 9 May Get a New 128GB storage Variant, TENAA Listing Tips And More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X