நீங்கள் எதிர்பார்த்த பட்ஜெட் விலையில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரவம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நீங்கள் எதிர்பார்தத் பட்ஜெட் விலையில் ரெட்மி 9 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இதன் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720x1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்தள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் தரமான ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36எஸ்ஒசி சப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் +2எம்பி செகன்டரி லென்ஸ் என மொத்தம் இரண்டு கேமராக்கள் மட்டுமே பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், க்ளோனாஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications