அமேசான் பிரைம் தினத்தில் ரெட்மி 9 விற்பனையா?- இதோ விவரங்கள்

|

ரெட்மி 9 கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்திய அறிமுகம் மற்றும் விற்பனை தேதி குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளது.

ரெட்மி 9 அறிமுகம்

ரெட்மி 9 அறிமுகம்

இந்தியாவில் ரெட்மி 9 அறிமுகம் குறித்த அறிவிப்பை சியோமி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியான டீசரில், ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள அமேசான் பிரைம் டே விற்பனையின்போது ரெட்மி 9 அமேசானில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய ரெட்மி சாதனம் அறிமுகம்

ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய ரெட்மி சாதனம் அறிமுகம்

ரெட்மி இந்தியா தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் இதுகுறித்த தெரிவிக்கையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய ரெட்மி சாதனம் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இந்த டுவிட்டில் பிரைம் என்ற வார்த்தையை காண்பிப்பதோடு 9 என்ற எண்ணை குறித்துள்ளது. இதன்மூலம் ரெட்மி 9 ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

விலை விவரங்கள்

விலை விவரங்கள்

ரெட்மி 9 சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் 4 ஜிபி ரேம் 64 சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் விலை தோராயமாக ரூ.8,540 என இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட மாடல் தோராயமாக ரூ.10,675 ஆகவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு மாடல் தோராயமாக ரூ.12,815 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.மேலும் இந்த சாதனத்தின் வடிமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்

மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வசதியுடன் உடன் மாலி ஜி52 ஆதரவைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா வடிவமைப்பு

கேமரா வடிவமைப்பு

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

5020எம்ஏஎச் பேட்டரி

5020எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் அடக்கம்.

யூ.எஸ்.பி டைப்-சி போர்டல்

யூ.எஸ்.பி டைப்-சி போர்டல்

4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்), யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Redmi 9 Expected to Launch on August 4 in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X