விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனத்தின துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 8ஏ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அதிநவீன வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 8ஏ சாதனத்தின் பின்புறம் 12எம்பி கேமரா இடம்பெற்றுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,3.5எம்எம் ஆடியோ ஜாக் என பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications