5000எம்ஏஎச் பேட்டரி,டூயல் கேமராவடன் ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,100-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

1500 x 720 பிக்சல் திர்மானம்
சியோமி ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1500 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10
சியோமி ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2ஜிபி/3ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

5000எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications