ரெட்மி 8ஏ டூயல் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: புத்தம் புதிய அப்டேட்.!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு MIUI 12 அப்டேட் கிடைத்துள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் ஆனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்தியாவில் உள்ள பயனர்கள் படிப்படியாக இந்த புதிய அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆண்ட்ராய்டு 9பை அடிப்படையிலான MIUI 11 உடன் இந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு கடந்த செப்டம்பர் மாதம் இந்த சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்தது. தற்சமயம் MIUI 12 அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் இந்த புதிய அப்டேட் 487MB கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1600 x 720 பிக்சல் திர்மானம்
சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி
சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 ( MIUI 11)இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படுதவதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட்
இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

5000எம்ஏஎச் பேட்டரி
சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications