Home
Mobile

ஒபன் சேல் விற்பனைக்கு வந்த ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன்.!

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் மற்றும் மி.காம் போன்ற வலைதளங்களில் ஒபன் சேல் விற்பனைக்கு வந்துள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போனை எந்த நேரமும் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 8ஏ டூயல்

சியோமி ரெட்மி 8ஏ டூயல்

சியோமி ரெட்மி 8ஏ டூயல் சாதனத்தில் டூயல் கேமரா வசதி, VoLTE மற்றும் VoWiFi போன்ற ப்ரீலோலட் ஆதரவுகளும் உள்ளது. மேலும் ரியல்மே சி 3 மற்றும் இன்ஃபினிக்ஸ் ஹாட் 8 போன்ற சாதனங்களுக்கு போட்டியாக வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 439சிப்செட்

ஸ்னாப்டிராகன் 439சிப்செட்

சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2ஜிபி/3ஜிபி ரேம்

2ஜிபி/3ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் போன்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

13எம்பி பிரைமரி லென்ஸ்

13எம்பி பிரைமரி லென்ஸ்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரெட்மி 8ஏ டூயல் விலை

ரெட்மி 8ஏ டூயல் விலை

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,499/-

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் விலை ரூ.6,999/-

Best Mobiles in India

English summary
Redmi 8A Dual now on open sale in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X