6.21-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான ரெட்மி 8 ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் விரைவில் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது பல்வேறு புதிய தொழில்நுட்ப ஆதரவுகளுடன்
பட்ஜெட் விலையில் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி 8 ஸ்மார்ட்போன் டிஸ்பிளே
ரெட்மி 8 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.21-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டு வெளிவரும் பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் மற்றும் 19:9 என்கிற திரைவிகிதம் மற்றும் சிறந்தபாதுகாப்பு அம்சம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா அம்சம்
ரெட்மி 8 சாதனத்தின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா 102எம்பி டெப்த் சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்இ எல்இடி பிளாஸ், என பல்வேறு ஆதரவுகள் இவற்றில் உள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சேமிப்பு வசதி
ரெட்மி 8 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/ஜிபி ரேம் மற்றும் 64/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications