ஜூலை 4: மலிவு விலையில் களமிறங்கும் ரெட்மி 7ஏ.!
சியோமி நிறுவனம் வரும் ஜூலை 4-ம் தேதி புதிய ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் மலிவு விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ரெட்மி 7ஏ சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

அட்டகாசமான டிஸ்பிளே:
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன் மாடல் 5.45-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 18:9 என்ற
திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மாரட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான சிப்செட் வசதி:
இந்த ஸ்மாரட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்ததை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும் என அந்நிறவனம் தகவல் தெரிவித்துள்ளது.

சேமிப்பு ஆதரவு:
ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

அசத்தலான கேமரா வசதி:
இந்த சாதனத்தில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் விலை:
ரெட்மி 7ஏ சாதனத்தில் 3000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக்போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் ரூ.5,999-விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications