Home
Mobile

ஏய் கருப்பன் வாரான்டா.. 7-இன்ச் டிஸ்பிளே உடன் புது Redmi ஸ்மார்ட்போன்.. சபாஷ் Honor-க்கு சரியான போட்டி!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி (Redmi), வழக்கத்திற்கு மாறாக பெரிய 7-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி நிறுவனம் தனது பிராண்டின் கீழ் இரண்டு புதிய நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக அவர் கூறுகிறார். அவற்றில் ஒன்று மிட் ரேன்ஜ் விலைப்பிரிவில் 6.59-இன்ச் டிஸ்பிளேவை கொண்ட ஒரு ப்ரோ மாடல் ஆகும்; மற்றொன்று அதிக செயல்திறன் தேவைப்படும் பயன்பாட்டிற்காக 7-இன்ச் பெரிய டிஸ்பிளேவுடன் உருவாக்கப்படும் மாடல் ஆகும்.

ஏய் கருப்பன் வாரான்டா.. 7-இன்ச் டிஸ்பிளே உடன் புது Redmi ஸ்மார்ட்போன்!

இருப்பினும் குறிப்பிட்ட டிப்ஸ்டர் ரெட்மி நிறுவனத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால் அவரது முந்தைய லீக் தகவல்கள் பெரும்பாலும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் தொடர்பானவையாகவே இருந்துள்ளன; எனவே, இந்த தகவலும் அதே பாணியில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது 7-இன்ச் டிஸ்பிளேவுடன் வருவது ரெட்மி ஸ்மார்ட்போனாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற ஒரு ஸ்மார்ட்போன் (7-இன்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போன்) குறித்த வதந்திகள் எழுவது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரியில், அதே டிப்ஸ்டர் மூலம், இரண்டு நிறுவனங்கள் 7-இன்ச் ஸ்மார்ட்போன்களை சோதித்து வருவதாக கூறி இருந்தார். பின்னர் ஏப்ரல் மாத தொடக்கத்தில், ரெட்மி நிறுவனமானது 7-இன்ச் டிஸ்பிளே + 10000mAh பேட்டரி காம்பினேஷனில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது.

பின்னர் ஏப்ரல் மாத இறுதியில், 2கே ரெசல்யூஷன் மற்றும் அதிக 'ரெஃப்ரெஷ் ரேட்' (refresh rate) வசதி உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் வெளியாகின; இவை, 7-இன்ச் 2கே டிஸ்பிளேவுடன் வரவிருக்கும் ரெட்மி கே100 (Redmi K100) சீரீஸ் ஸ்மார்ட்போன் குறித்த முந்தைய அறிக்கையுடன் ஒத்துப்போயின. ஆனால் இப்போது வரை எந்த ரெட்மி மாடலில் 7-இன்ச் டிஸ்பிளே இருக்கும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

பெரிய டிஸ்பிளேக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரே நிறுவனம் ரெட்மி மட்டுமல்ல என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஹானர் (Honor) நிறுவனமும் 185ஹெர்ட் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 7-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனையும், 2என்எம் சிப் தொழில்நுட்பத்தில் இயங்கும் 6.89-இன்ச் டிஸ்பிளே ஸ்மார்ட்போனையும் உருவாக்கி வருவதாக இதே டிப்ஸ்டர் மூலம் தெரியவந்துள்ளது.

ஒப்பீட்டளவில் பார்த்தால், ஷாவ்மீ 17 அல்ட்ரா (Xiaomi 17 Ultra), ஹூவாய் மேட் 80 ப்ரோ மேக்ஸ் (Huawei Mate 80 Pro Max) மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் (iPhone 17 Pro Max) உள்ளிட்ட தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீன் சைஸ் ஆனது அதிகபட்சமாக 6.9 இன்ச் வரை மட்டுமே உள்ளது. இந்த லீக் தகவல்கள் உண்மையாகும்பட்சத்தில், 2026 ஆம் ஆண்டில் வெளியாகும் ஸ்மார்ட்போன்களின் ஸ்க்ரீன் சைஸ் ஆனது இந்த அளவை தாண்டி செல்லக்கூடும்.

10100mAh பேட்டரி + 200MP கேமரா ரெட்மி ஸ்மார்ட்போன்: ரெட்மி நிறுவனம் விரைவில் அதன் ரெட்மி நோட் 17 சீரீஸ் (Redmi Note 17 Series) ஸ்மார்ட்போன்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 17 (Redmi Note 17), ரெட்மி நோட் 17 ப்ரோ (Redmi Note 17 Pro) மற்றும் ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் (Redmi Note 17 Pro Max) ஆகிய மூன்று மாடல்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள்: ப்ரோ மேக்ஸ் மாடலின் டிஸ்பிளே சைஸ் குறித்த விவரங்களும் இல்லை. ஆனால் இதுவும் 1.5கே ரெசல்யூஷன் ஆதரவுடன் கூடிய பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டிமென்சிட்டி 7500 (Dimensity 7500) சிப்செட் மூலம் இயங்கும்.

ப்ரோ மேக்ஸ் மாடலின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, இதில் மிகப்பெரிய 10,100mAh பேட்டரி ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை பேக் செய்யலாம். மேலும், இதிலும் டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் முழுமையான நீர்-எதிர்ப்பு கொண்ட சேசிஸ் (fully water-resistant chassis) இடம்பெறும்.

Best Mobiles in India

English summary
Redmi 7 inch Display Smartphone Could be Performance Based Phone Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X