சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 5ஏ பிளாஷ் சேல் விற்பனை.! விலை மற்றும் சலுகை விபரக்குறிப்பு.!
இந்த பிளாஷ் சேல் விற்பனையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த புது மாடல் ஆனா சியோமி ரெட்மி 6 மற்றும் சியோமி ரெட்மி 5ஏ இன் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.
சியோமி நிறுவனத்தின் அடுத்த பிளாஷ் சேல் விற்பனை இன்று மதியம் சரியாக 12 மணிக்குத் துவங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த பிளாஷ் சேல் விற்பனையில் சியோமி நிறுவனத்தின் அடுத்த புது மாடல் ஆனா சியோமி ரெட்மி 6 மற்றும் சியோமி ரெட்மி 5ஏ இன் விற்பனை இன்று முதல் துவங்குகிறது.

பிளாஷ் சேல் விற்பனை
இந்த புதிய சியோமி ரெட்மி 6 மற்றும் ரெட்மி 5ஏ-க்கான பிளாஷ் சேல் விற்பனை பிளிப்கார்ட் இல் பிரத்தியேகமா இன்று (செப்டம்பர் 15, 2018) மதியம் 12 மணியிலிருந்து துவங்குகிறது. இத்துடன் ரெட்மி 6 ஸ்மார்ட்போன் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான சியோமி மி ஸ்டோர் வலைத்தளத்தில் கிடக்கிறது.

பிளிப்கார்ட் விற்பனை
தன்னுடைய அனைத்து தயாரிப்புகளையும் சியோமி நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து தனது விற்பனைகளைச் சிறப்பாக செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாய் இன்றும் சியோமி நிறுவனம் தனது பிளாஷ் சேல் விற்பனையை பிளிப்கார்ட் மூலம் அறிவித்திருக்கிறது.

சியோமி ரெட்மி 5ஏ
இந்த வருடத்தில் சியோமி தயாரிப்பில் அதிக யூனிட் விற்ப்பனை செய்த ரெட்மி 5ஏ மாடல் ஸ்மார்ட்போன் இன்று மறுபடியும் விற்பனைக்கு வரப்போகிறது என்பது கூடுதல் சிறப்பு. சியோமோ ரெட்மி 5ஏ பிளிப்கார்ட் இல் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது சியோமி இன் மி ஸ்டோர் தலத்தில் ரெட்மி 5ஏ விற்பனை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ரெட்மி 5ஏ சிறப்பம்சங்கள்:
- இரண்டு நானோ சிம் வசதி
- MIUI 9 ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளம்
- 5 இஞ்சு ஹஃச் டி திரை(720x1280 பிக்செல்ஸ்)
- ஆக்டா கோர் ஸ்னாப்ட்ராகன் 425 SoCயுடன் கூடிய 2GB மற்றும் 3GB ரேம்.
- 128GB வரை விரிவாக்கம் செய்துகொள்ளக்கூடிய 16GB மற்றும் 64GB உள் சேமிப்பு வசதி.
- LED ஃப்ளாஷுடன் 13 மெகாபிக்செல் சென்சார் f/2.2 அபர்சர் கொண்ட முன் கேமரா மற்றும் 5 மெகாபிக்செல் சென்சார் f/2.0 அபர்சர் கொண்ட பின் கேமரா
- 4G VoLTE
- வை-ஃபய் 802.11ac
- ப்ளூடூத் v4.1
- மைக்ரோ USB போர்ட்
- GPS/ A-GPS
- 3.5 mm ஹெட் போன் ஜாக்
- 3000 mAh பேட்டரி

சியோமி ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:
- 5.45 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் கூடிய 720 x 1440 பிக்சல் ரெசொலூஷன் 18:9 விகித தோடு திரை.
- மீடியா டெக் MT6762 ஹெலியோ P22 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 2.0ஜிகா ஹெர்ட்ஸ் உடன் கூடிய பவர் விஆர் GE8320 ஜிபியு
- 3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வெறியன்ட்
- 12 மெகா பிக்சல் பின் கேமரா உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் கேமரா
- 5 மெகா பிக்சல் முன் செல்பி கேமரா
- எஹ்டி வீடியோ ரெகார்டிங்
- ஏஐ பேஸ் அன்லாக்
- ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 9.6 இயங்குதளம்
- 4G VoLTE
- வை-ஃபய்
- ப்ளூடூத்
- மைக்ரோ USB போர்ட்
- ஜிபிஎஸ்
- 3.5 mm ஹெட் போன் ஜாக்
-3000 எம்ஏஎச் பேட்டரி

சலுகைகள்:
சியோமி ரெட்மி 6 இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளதா சேமிப்பு கொண்ட துவக்க வேரியண்ட் இன் ஆரம்ப விலை வெறும் ரூ. 7,999 என நிர்ணயம் செய்யப்பட்டு இன்று பிளிப்கார்ட் மற்றும் மி ஸ்டோர் இல் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த பிளாஷ் சேல் விற்பனையின் துவக்கமாக சியோமி நிறுவனம் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி இறுக்குகிறது. ஆக்ஸிஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 உடனடி சலுகை உடன் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைக்குக் கூடுதல் 5% சலுகையும் வழங்கப்படுகிறது. இத்துடன் மாதம் வெறும் ரூ.899 என்ற வட்டி இல்லா தவணை முறையில் புதிய ரெட்மி 6 ஸ்மார்ட்போன்கள் விற்பமி செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications