டபுள் ட்ரீட் : ரெட்மீ நோட் 5 உடன் வெளியாகிறது ரெட்மீ 5ஏ.!
ரெட்மீ 4 தான் தற்போது இந்தியாவின் மிக சிறந்த மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஆக ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனும் அதே வரிகளை பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாகவே ஆளும் சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் ரெட்மீ நோட் 5 சார்ந்த அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் சமீபத்தில் ஆன்லைனில் காணப்பட்டது. அதனை தொடர்ந்து இப்போது சீன நிறுவனத்தின் ரெட்மீ 4ஏ ஸ்மார்ட்போனின் வாரிசான ரெட்மீ 5ஏ சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
ஆக, சியோமி ரெட்மீ நோட் 5 உடன் இணைந்து சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் சார்ந்த பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இரண்டு கருவிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிமுகமாகுமென்றும் நம்பப்படுகிறது. ஆன்லைனில் ஹாட்-டாப்பிக் ஆக வளம் வரும் இக்கருவிகள் சார்ந்த விவரங்கள் தான் என்ன.?

ரெட்மீ 5ஏ சில்லறை பெட்டி
தற்போது வெளியாகியுள்ள ஒரு படம் அன்பாக்ஸ் செய்யப்படாத ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் பெட்டிகளை அல்லது ரெட்மீ 5ஏ சில்லறை பெட்டிகளை காட்சிப்படுத்துகிறது. ஆனால் ரெட்மீ 5ஏ சார்ந்த வன்பொருள் விவரங்கள் ஏதுமில்லை. இருப்பினும் குறைந்தபட்சம் இந்த தொலைபேசியின் பெயர் என்ன என்பது நமக்குத் தெரிய வந்துள்ளது.

அதே வரிகளை பின்பற்றலாம்
ரெட்மீ 4 தான் தற்போது இந்தியாவின் மிக சிறந்த மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. ஆக ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனும் அதே வரிகளை பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மீ நோட் 5
இதற்கு முன்னர் வெளியான சியோமி ரெட்மீ நோட் 5 அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி ரெட்மீ நோட் 4 போன்றே முழு உலோக உடல் வடிவமைப்பு கொண்டிருக்கும் என்று அறியப்படுகிறது ஆனால், கைரேகை ஸ்கேனர் அம்சத்தை பொறுத்தமட்டில் வரவிருக்கும் இந்த பதிப்பு ஒரு பெரிய புதுப்பிப்பை எதிர்பார்க்கலாம்.

5.5 அங்குல 1080பி திரை
மேலும் ரெட்மீ நோட் 5 சாதனத்தில் 5.5 அங்குல 1080பி திரை இருக்கலாம் அதவாது மிகவும் வெளிப்படையாக ரெட்மீ நோட் 4 போன்றே வெளிவரலாம். மறுபக்கம் பல மேம்பட்ட வெளிப்புற தெளிவுத்திறன் மற்றும் வன்பொருள் அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசசர்
இக்கருவி ஒரு சிறந்த வேறுபாடாக இருக்குமென்பதை உறுதி செய்யும் வண்ணம் 3ஜிபி / 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64ஜிபி உள் சேமிப்பு கொண்ட குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசசர் மூலம் இந்த போன் இயங்கும்.

16 மெகாபிக்சல் மற்றும் 13 மெகாபிக்சல்
ரெட்மீ நோட் 5 சாதனமானது யூஎஸ்பி டைப்-சி மூலம் சார்ஜிங் மற்றும் டேட்டா சின்கிங் வழங்கும் மற்றும் ப்ளூடூத் 5.0 இணைப்பும் கொண்டிருக்கும். சாதனம் அதன் பின்னால் ஒரு 16 மெகாபிக்சல் கேமராவும் மற்றும் முன்பக்கம் 13 மெகாபிக்சல் கேமராவும் கொண்டிருக்கலாம்

ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட்
3,790எம்ஏஎச் பேட்டரி மூலம் விரைவான சார்ஜ் 4.0 க்கான ஆதரவு கொண்ட இக்கருவி மென்பொருள் பக்கத்தில், ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ (MIUI) கொண்டு இயங்குகிறது.


Click it and Unblock the Notifications