சியோமி பிரியர்களே என்ஜாய்: ரூ.7,499/-க்கு ஆப்லைனில் ரெட்மீ 5ஏ (3ஜிபி).!
ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாறுபாடு ஆன்லைனில் ரூ.4,999/-க்கு (ரூ .1,000 அறிமுக விலை குறைப்பு உட்பட) கிடைக்கிறது.
சியோமி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் சாதனமான ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன் ஆனது, விரைவில் இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரிக் அண்ட் மோட்டார் கடைகளின் வழியாக ஆஃப்லைனில் கிடைக்கவுள்ளது.

இரண்டு சேமிப்பு மாதிரிகளில் (3 ஜிபி ரேம் / 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 2ஜிபி ரேம்) வெளியான இக்கருவி பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட், மி.காம் மற்றும் மி ஹோம் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கும். குறிப்பாக சியோமி ரெட்மீ 5ஏ (2ஜிபி) மாதிரியானது மி பங்குதாரர்களின் கடைகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ .1,000 அறிமுக விலை குறைப்பு
ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் மாறுபாடு ஆன்லைனில் ரூ.4,999/-க்கு (ரூ .1,000 அறிமுக விலை குறைப்பு உட்பட) கிடைக்கிறது மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் பதிப்பானது மி ஹோம் ஸ்டோரில் ரூ.6,999/-க்கு கிடைக்கிறது.

கூடுதலாக ரூ.500
மேலே குறிப்பிட்டுள்ளபடி, சியோமி ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் மாறுபாடானது, பெரும் மி ஸ்டோர்களில் ரூ 7,499/-க்கு கிடைக்குமென்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுயுள்ளார். அதாவது அறிமுக விலையை விட கூடுதலாக ரூ.500/-க்கு (ரூ.7,499) வாங்க கிடைக்கும்.

ஆண்ட்ராய்டு நௌவ்கட்
நினைவூட்டும் வண்ணம், சியோமி ரெட்மீ 5ஏ ஆனது ஒரு கலப்பு இரட்டை சிம் (நானோ + நானோ) ஸ்லாட் ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

டிஸ்பிளே
இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது மற்றும் 2ஜிபி / 3ஜிபி ரேம் உடன் இணைந்து 1.4ஜிகாஹெர்ட்ஸ்வா க்ல்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

13 மெகாபிக்சல் பின்புற சென்சார்
கேமரா துறையை பொறுத்தமட்டில், ரெட்மீ 5 ஏ ஆனது எப் / 2.2 துளை, பிடிஏஎப் மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் ஒரு 5 மெகாபிக்சல் (எப் / 2.0 துளை) செல்பீ கேமரா கொண்டுள்ளது.

3000எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி / 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.


Click it and Unblock the Notifications