ரெட்மீ 5 இந்திய அறிமுகம்; விலையை சொன்னால் நம்புவீர்களா.?

|

ஏற்கனவே பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை வெளிப்படையாக ஆளும் சியோமி நிறுவனமானது மென்மேலும் அதன் ஆளுமையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் அதன் 2018-ஆம் ஆண்டிற்கான சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வருகிற பிப்ரவரி 14 அன்று அறிமுகம் செய்யவுள்ளது.

ரெட்மீ 5 இந்திய அறிமுகம்; விலையை சொன்னால் நம்புவீர்களா.?

நிறுவனத்தின் அடுத்த சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் இந்தியாவின் அடுத்த பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் சியோமி ரெட்மீ 5 தான் என்று கூறியதுமே நம்பும் உங்களால் அதன் அம்சங்களையும், விலை நிர்ணயத்தையும் கூறினால் நம்ப முடியுமா என்பது சந்தேகமே.!

ஒரு பெரிய '5' லோகோ

ஒரு பெரிய '5' லோகோ

2018 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் முதல் உற்பத்தியை அறிமுகப்படுத்துவதற்காக சியோமி நிறுவனம் ரெட்மீ 5 வெளியீடு சார்ந்த செய்தி ஊடக அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது. இந்த அழைப்பில் ஒரு பெரிய '5' லோகோ இடம்பெற்றுள்ளது. அது சியோமியின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரெட்மீ 5 இந்தியாவில் வெளியிடப்படும் என்பதை வெளிப்படுத்துகிறது.

மூன்று மாறுபாடுகள்

மூன்று மாறுபாடுகள்

எதிர்வரும் சியோமி ரெட்மீ 5 ஸ்மார்ட்போனின் 2ஜிபி ரேம் / 16ஜிபி சேமிப்பு, 3ஜிபி ரேம் / 32ஜிபி சேமிப்பு, மற்றும் 4 ஜிபிரேம் / 32ஜிபி சேமிப்பு ஆகிய மூன்று மாறுபாடுகளும் இந்தியாவில் விற்கப்படும். மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் இந்நிகழ்வில் வெளியாகுமா என்பது பற்றிய வார்த்தைகள் இல்லை.

நிற வகைகள்

நிற வகைகள்

வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மீ 5 ஆனது கடந்த டிசம்பரில் - கருப்பு, தங்கம், லைட் ப்ளூ மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நிற வகைகளில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ்ஆகிய இரு கருவிகளும் டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போன்கள் ஆகும். மேலும் அவைகள் ஆண்ட்ராய்டு நௌவ்கட் உடனாக மியூஐ 9 கொண்டு இயங்குகின்றன.

திரை விகிதம் மற்றும் டிஸ்பிளே

திரை விகிதம் மற்றும் டிஸ்பிளே

ரெட்மீ 5 ஆனது 5.7 அங்குல எச்டி ப்ளஸ் (720x1440 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுருக்க, அதே நேரத்தில் பெரிய மாறுபாடான ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 5.99 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x2160 பிக்சல்கள்) மற்றும் ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ரெட்மீ 5 மெமரி

ரெட்மீ 5 மெமரி

ரெட்மீ 5 ஆனது முன்னணி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது முன்னர் கூறியபடி, 2ஜிபி/ 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டு முறையே 16ஜிபி / 32ஜிபி ஆகிய உள்ளடக்கிய சேமிப்பு கொண்டுள்ளது.

ரெட்மீ 5 ப்ளஸ்

ரெட்மீ 5 ப்ளஸ்

மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடுகள் கீழ் முறையே 32ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்புத்திறன்கள் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொறுத்தமட்டில் இரண்டு தொலைபேசிகளுமே, எப்/ 2.2 துளை மற்றும் பிடிஏஎப் உடனான 12 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் மென்மையான பிளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது.

How to Find a domain easily for your business (TAMIL)
கைரேகை சென்சார்

கைரேகை சென்சார்

இரு கருவிகளுமே பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

மேலும் இந்த தொலைபேசிகளானது ஆம்பியண்ட் லைட் சென்சார், பராக்ஸிமிட்டி சென்சார், ஜியோர்ஸ்கோப், மற்றும் அக்செலரோமீட்டர் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. ரெட்மீ 5 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

ரெட்மீ 5 விலை நிர்ணயம்

ரெட்மீ 5 விலை நிர்ணயம்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் இக்கருவியின் 2 ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.8,100/-க்கும், இதன் 3ஜிபி ரேம் மாறுபாடானது சுமார் ரூ.9,100/-க்கும் மற்றும் 4ஜிபி மாறுபாடானது சுமார் ரூ.11,200/-க்கும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம்.

ரெட்மீ 5 ப்ளஸ் விலை நிர்ணயம்

ரெட்மீ 5 ப்ளஸ் விலை நிர்ணயம்

மறுகையில் உள்ள சியோமி ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், அதன் 4ஜிபி ரேம் மாறுபாடுனது சுமார் ரூ.10,200/-க்கும், மற்றும் 4 ஜிபி ரேம் மாறுபாடானது கிட்டத்தட்ட ரூ.13,200/-க்கும் இந்திய சந்தையைஅடையலாம்.

துல்லியமான விலை விவரங்கள்

துல்லியமான விலை விவரங்கள்

இந்த இரு கருவிகளின் கிடைக்கும்தன்மை மற்றும் துல்லியமான விலை விவரங்கள் தற்போது தெரியவில்லை, அது தொடக்க நிகழ்வில் உறுதிப்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம். அது சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Redmi 5 India Launch Date Expected as February 14. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X