மலிவு விலையில் அறிமுகமான புதிய ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போன்.. லீக் தகவலே அட்டகாசம்

|

ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பத்துடன் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை பலவிதமான விலை பிரிவின் கீழ் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது ரெட்மி நிறுவனம் அதன் புதிய ரெட்மி 20 எக்ஸ் (Redmi 20X) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் போஸ்டரை நிறுவனம் சீனாவின் மைக்ரோ பிளாக்கிங் வலைத்தளமான வெய்போவில் ஒரு டிப்ஸ்டர் மூலம் பகிரப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போன்

புதிய ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போன்

இந்த புதிய ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போனின் சில முக்கிய விவரக்குறிப்புகள், விலை நிர்ணயம் மற்றும் வேறு சில விவரங்களை இந்த போஸ்டர் சுட்டிக்காட்டியுள்ளது. வரவிருக்கும் புதிய ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 எக் ஸ்மார்ட்போனின் வாரிசாக இருக்கும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. போஸ்டரின் படி, ரெட்மி 20 எக்ஸ் ஸ்மார்ட்போன், அதன் 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுக்கு 999 யுவான் என்று விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 11,200 ஆகும்.

ரெட்மி நோட் 10 5 ஜி உடனே ஒப்பீடு

ரெட்மி நோட் 10 5 ஜி உடனே ஒப்பீடு

ஆக இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் வெறும் ரூ.11,200 என்ற ஆரம்ப விலையுடன் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நீலம், பச்சை மற்றும் வெள்ளி வண்ணங்களில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் உலக சந்தையில் அறிவிக்கப்பட்ட ரெட்மி நோட் 10 5 ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட மாடலாக ரெட்மி 20 எக்ஸ் இருக்கும் என்றும் டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சத்தைப் பொறுத்தவரை, ரெட்மி 20 எக்ஸ், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சி மற்றும் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?உயிரோடு புதைக்கப்பட்ட யூடியூபர்.. 52 மில்லியன் பேர் பார்த்த வீடியோ.. இறுதியில் என்ன ஆச்சு தெரியுமா?

புதிய ரெட்மி 20 எக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போனா?

புதிய ரெட்மி 20 எக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போனா?

மேலும், இந்த புதிய ரெட்மி 20 எக்ஸ் 5 ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இது ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பை கொண்டிருக்கும் மற்றும் இரட்டை-எல்இடி ப்ளாஷ் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ரெட்மி 20 எக்ஸ் போன் 6.43 இன்ச் எஃப்.எச்.டி பிளஸ் அமோலேட் டிஸ்பிளேவுடன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம், 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.2 சேமிப்பகத்துடன் வரும்.

கேமரா மற்றும் பேட்டரி

கேமரா மற்றும் பேட்டரி

இந்த சாதனம் ஆக்டா கோர் டைமன்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படும். இது ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 12 இல் இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் 48 எம்.பி சோனி IMX582 முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில், இது 13MP செல்பி ஷூட்டர் கொண்டிருக்கும். இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Redmi 20X key specs colour variants price leaked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X