Home
Mobile

Redmi களமிறக்கிய புதிய போன்.. 5160எம்ஏஎச் பேட்டரி.. ஆண்ட்ராய்டு 16 OS.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17சி (Redmi 17C) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது ரெட்மி 17சி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி 17சி அம்சங்கள் (Redmi 17C Specifications): 6.88-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Redmi களமிறக்கிய புதிய போன்.. 5160எம்ஏஎச் பேட்டரி..  எந்த மாடல்?

மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்செட் (MediaTek Helio G81 Ultra chipset)உடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

13எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு அருமையாக உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது புதிய ரெட்மி 17சி ஸ்மார்ட்போன். 4ஜி, வைஃபை 5, ப்ளூடூத் 5.4, 3.5எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன.

Redmi களமிறக்கிய புதிய போன்.. 5160எம்ஏஎச் பேட்டரி..  எந்த மாடல்?

5160எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ரெட்மி 17சி ஸ்மார்ட்போனின் விலை 799 yuan (இந்திய மதிப்பில் ரூ.11,500)-ஆக உள்ளது. சீ ப்ரீஸ் ப்ளூ (Sea Breeze Blue), டான்சியா ரெட் (Danxia Red) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Redmi 17C with 5160mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X