Home
Mobile

REDMI போட்டான் பாரு.. ரூ.20,999 க்கு 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. LCD டிஸ்பிளே.. எந்த மாடல்?

பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்க விரும்பும் கஸ்டமர்களுக்கு பக்கா மாடலாக ரெட்மி 17சி 5ஜி (REDMI 17C 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கியது. 6.9 இன்ச் டிஸ்பிளேவுடன் வெளியாகி ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றது. இப்போது, விற்பனைக்கு வந்துவிட்டது. விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு எப்போதும் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடல்களே பக்காவாக இருக்கும். இதில் பட்ஜெட் மாடலாக ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. டிஸ்பிளே மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 33 ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்தது. இன்று முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டது.

REDMI போட்டான் பாரு.. ரூ.20,999 க்கு 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்!

இப்போது அமேசான் தளத்தில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. அமேசான் பே ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.629 தள்ளுபடி கிடைக்கிறது. மேலும், 3 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி 17சி 5ஜி அம்சங்கள் (REDMI 17C 5G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 810 எச்பிஎம் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட மாடலாக இந்த ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

மேலும், சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொடுத்து இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுத்து இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 10W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக்குடன் இந்த ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 7.99 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொண்ட மாடலாக இருக்கிறது.

5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 801.11 ஏசி (Wi-Fi 802.11 ac) கனெக்டிவிட்டிகளை கொடுத்துள்ளது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஜிபிஎஸ் (GPS) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Port) கொடுத்து இருக்கிறது. காபி ப்ரூ (Coffee Brew), பர்ப்பிள் டாவுன் (Purple Dawn) மற்றும் டார்க் நைட் (Dark Night) கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI 17C 5G With 6000mAh Battery Available At Rs 20999 in Amazon Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X