பிரிச்சி விட்டாப்ல.. ரூ.20,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலாக ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50 எம்பி கேமராவை பேக் செய்துள்ளது. இந்த ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, சிங்கப்பூர் மார்கெட்டில் இந்த ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற மார்கெட்களில் விரைவில் வெளியாக இருக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால், இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏற்கனவே, ரெட்மி நோட் 17 5ஜி (Redmi Note 17 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகி இருக்கிறது.

ரெட்மி 17சி 5ஜி அம்சங்கள் (Redmi 17C 5G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 810 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் டிசி டிம்மிங் கொடுத்து இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (Octa Core MediaTek Dimensity 6300) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. மாலி ஜி57 எம்சி2 (Mali G57 MC2) ஜிபியு கிடைக்கிறது. சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.05 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + Auxiliary லென்ஸ் கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode) மற்றும் போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கிடைக்கிறது.
மேலும், டைம்-லேப்ஸ் (Time-lapse) பீச்சரும் கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமரா கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5ஜி, 4ஜி வோஎல்டிஇ கிடைக்கிறது. மேலும், வை-பை (Wi-Fi), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சிங்கப்பூரில் நாட்டின் கரென்சியை கணக்கில் எடுத்தால், இந்திய மதிப்பில் ரூ.20,000 பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. இதை கிட்டத்தட்ட குளோபல் மார்கெட் வெளியீடாக எடுத்து கொள்ளலாம். இந்தியாவில் வெளியானால், இதே பட்ஜெட்டில் கிடைக்கலாம். பிளாக் (Black), பிரவுண் (Brown) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications