Home
Mobile

ரெடியா இருங்க.. LCD டிஸ்பிளே.. ஆண்ட்ராய்டு 16 OS.. கம்மி விலையில் களமிறங்கும் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த போன் தற்போது BIS சான்றிதழ் தளத்தில் 2607FRNEAI என்று மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் ஆன்லைனில் கசிந்த போனின் விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி 17சி 5ஜி அம்சங்கள் (Redmi 17C 5G Specifications): 6.88-இன்ச் எச்டி எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த போனின் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 600 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ரெடியா இருங்க.. கம்மி விலையில் களமிறங்கும் ரெட்மி 5ஜி போன்..

13எம்பி ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் புதிய ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்செட் ( MediaTek Helio G81 Ultra chipset) உடன் புதிய ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

5160எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட வசதிகள் இந்த புதிய ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் வெளியாகும்.

photo credits: 91mobiles, redmi

Best Mobiles in India

English summary
Redmi 17C 5G spotted on BIS certification: May launch in India soon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X