Home
Mobile

ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி போன் பட்ஜெட் விலையில் வெளியாகி உள்ளது. இப்போது ரெட்மி 17சி 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி 17சி 5ஜி அம்சங்கள் ( Redmi 17C 5G specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 810 நிட்ஸ் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6000எம்ஏஎச் பேட்டரி..

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

HyperOS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. சிங்கிள் பாட்டம்-பேர்டெட் ஸ்பீக்கர் (Single Bottom-ported Speaker) இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

6000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை 5, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.22,999-ஆக உள்ளது. வரும் அக்டோபர் 7-ம் தேதி அமேசான், MI.Com போன்ற தளங்களில் இந்த போன் விற்பனைக்கு வரும். காஃபி ப்ரூ, பர்பிள் டான் மற்றும் டார்க் நைட் கலர்களில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi 17C 5G smartphone launched in India: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X