Home
Mobile

ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. 6000எம்ஏஎச் பேட்டரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் ரீலோடெட் (Great Indian Festival Reloaded) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கின்றன. அதேபோல் ரெட்மி 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) போனுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

ஆர்டர் போட்ருங்க.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்..

ரெட்மி 17சி 5ஜி அம்சங்கள் ( Redmi 17C 5G specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (MediaTek Dimensity 6300 chipset) உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். கேமிங் பயனர்களை கவரும் வகையில் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1,600 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 810 நிட்ஸ் பிரைட்னஸ், 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 16.7 மில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் HyperOS 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. சிங்கிள் பாட்டம்-பேர்டெட் ஸ்பீக்கர் (Single Bottom-ported Speaker) இந்த போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

ரெட்மி 17சி 5ஜி ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி எல்இடி, வைஃபை 5, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.. காஃபி ப்ரூ, பர்பிள் டான் மற்றும் டார்க் நைட் கலர்களில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi 17C 5G is available 48 percent discount in Amazon Great Indian Festival 2026 Reloaded sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X