Home
Mobile

இனி இந்தியாவில் Redmi ராஜ்ஜியம் தான்.. பக்கா பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 5ஜி உடன் புது போன்.. எந்த மாடல்?

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் இந்தியாவிற்காக ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் சீரீஸை தயாரித்து வருவதாக தெரிகிறது. ஒரு புதிய பிஐஎஸ் (BIS) சான்றிதழ் லிஸ்டிங் ஆனது, ரெட்மி 17 5ஜி (Redmi 17 5G) ஸ்மார்ட்போனுடன் தொடர்புடைய மாடல் நம்பரை வெளிப்படுத்தியுள்ளது.

பொதுவாக பிஐஎஸ் சான்றிதழை பெற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் உடனடி அறிமுகத்தை காணும் என்பதால், ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகம் வெகு தொலைவில் இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மாடல் பெயர் குறிப்பிடுவது போலவே ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது முன்னதாக வெளியான ரெட்மி 15 5ஜி (Redmi 15 5)G மாடலின் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi ராஜ்ஜியம் தான்.. பக்கா பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 5ஜி!

நினைவூட்டும் வண்ணம் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன், கடந்த ஆகஸ்ட் 2025-இல் இந்தியாவில் ரூ.14,999 என்கிற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது இது சற்று அதிக விலையில் வாங்க கிடைக்கிறது. ரெட்மி 15 5ஜி மாடலானது பேட்டரி லைஃப் மற்றும் டிஸ்ப்ளே அளவில் கவனம் செலுத்தி, பட்ஜெட் பிரிவில் 7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி, 144ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 6s ஜென் 3 சிப்செட் மற்றும் ஐபிP64 ஆகிய முக்கிய அம்சங்களை வழங்குகிறது,

ஆக வரவிருக்கும் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனில் நாம் இதே போன்ற அம்சங்களை (7000mAh பேட்டரி உட்பட), சற்றே மேம்படுத்தப்பட்ட அம்சங்களாக எதிர்பார்க்கலாம். சுவாரசியமாக ஷாவ்மீ நிறுவனம் ரெட்மி 17 ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்டிலும் பணியாற்றி வருவதாக தெரிகிறது. அதாவது ரெட்மி 17 5ஜி உடன் சேர்ந்து ரெட்மி 17 4ஜி மாடலும் வெளியாகலாம்.

ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் எப்சிசி தரவுத்தளத்தில் 4G இணைப்பு, புளூடூத், டூயல்-பேண்ட் வைஃபை ஆகியவற்றுக்கான ஆதரவுடனும், 8ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வரையிலான பல மெமரி வேரியண்ட்டுகள் காணப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக 5ஜி சப்போர்ட் தேவை இல்லாத வாடிக்கையாளர்கள் 4ஜி மாடலை, ஒப்பீட்டளவில் மலிவான விலைக்கு வாங்க முடியும்.

சியோமி, ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் இருப்பது போலவே அதே பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளே போன்ற அம்சங்கள் மீதான கவனத்தை தொடருமா அல்லது மலிவு விலையில் 5ஜி ஆதரவு என்கிற போக்கின் மீது அதிக கவனம் செலுத்துமா என்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அதே ரூ.15,000 - ரூ.18,000 விலை வரம்பில் நீடித்தால், இது கடுமையான போட்டியை கொடுக்கும் மற்றும் எதிர்கொள்ளும்.

முன்னதாக அறிமுகமான ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144 ஹெட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1080 × 2340 பிக்சல்ஸ்
- 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- லோ ப்ளூ ஒளி, ஃப்ளிக்கர் ஃபிரீ மற்றும் சர்க்காடியன்-பிரெண்டலி தரநிலைகளுக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்கள்

- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் உடனான ஹைப்பர்ஓஎஸ் 2.0
- 2 வருட மேஜர் ஓஎஸ் அப்டேட்
- 4 வருட செக்யூரிட்டி அப்டேட்
- கூகுள் ஜெமினை மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஏஐ அம்சங்கள்

- ஏஐ ஆதரவுடன் கூடிய டூயல் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ பியூட்டி (AI Beauty) மற்றும் ஏஐ ஏரேஸ் (AI Erase) போன்ற ஏஐ அம்சங்கள்
- டால்பி ஆல் சான்றளிக்கப்பட்ட ஸ்பீக்கர்ஸ்

- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- ஐஆர் பிளாஸ்டர்
- 5ஜி, 4ஜி
- ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ்
- யூஎஸ்பி டைப்-C போர்ட்
- அளவீட்டில் 168.48×80.45×8.40மிமீ
- எடையில் 217 கிராம்

Best Mobiles in India

English summary
Redmi 17 in Both 5G and 4G Variants Tipped to Launch Soon in India What We can Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X