தேதி குறிச்சாச்சு.. 7900mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. புது REDMI ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
வருகிற செப்டம்பர் 3ஆம் தேதியன்று இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. குளோபல் மார்கெட்டுக்கு கிடைத்த அதே டிசைனை இதிலும் பார்க்க முடிகிறது.
ஆனால், பீச்சர்கள் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. குளோபல் மார்கெட்டில் 7500mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது. ஆனால், இந்தியாவில் வெளியாக இருக்கும் வெர்ஷனில் 7900mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இப்போது, பேட்டரி, சிப்செட், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் அதிகராப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன.

ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (REDMI 17 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Qualcomm Snapdragon 4 Gen 5) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. ஆஸ்ட்ரல் கேமரா டெகோ (Astral Camera Deco) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. 7900mAh பேட்டரி கிடைக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கிடைக்கிறது. எட்டர்னல் ஆரஞ்சு (Eternal Orange), எண்ட்லெஸ் ப்ளூ (Endless Blue) மற்றும் அப்சலூட் பிளாக் (Absolute Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
குளோபல் மார்கெட்டில் வெளியான ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்தது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைத்தது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டது.
அட்ரினோ ஜிபியு கிடைத்தது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Hyper OS 3) கிடைத்தது. 50 எம்பி மெயின் கேமரா + ஆக்சிலரி லென்ஸ் கிடைத்தது. இதில் ஃபிலிம் கேமரா (Film Camera), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), ஆட்டோ நைட் மோட் (Auto Night Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. 8 எம்பி செல்பீ கேமராவுடன் குளோபல் வேரியண்ட் கிடைத்தது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டும் கிடைக்கிறது. குளோபல் மார்கெட்டில் ஆரம்ப விலை ரூ.24,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகியது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. பேசிக் வேரியண்ட் மேலும் மலிவான விலைக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications