பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. 7900எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2026 (Amazon Great Indian Festival Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான ரெட்மி 17சி 5ஜி (Redmi 17C 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது அமேசான் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,998 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.22,998 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (Redmi 17 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 825 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 16.7 மில்லியன் கலர்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
தரமான குவால்காம் ஆக்டா கோர்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட்(Qualcomm's octa-core Snapdragon 4 Gen 5 chipset) உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.
அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

7900எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 232 கிராம் ஆகும். அப்சல்யூட் பிளாக் (Absolute Black), எண்ட்லெஸ் ப்ளூ (Endless Blue) மற்றும் எடர்னல் ஆரஞ்சு (Eternal Orange) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications
