ரெட்மி அறிமுகம் செய்த புதிய 5ஜி போன்.. 6300எம்ஏஎச் பேட்டரி.. 13எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17 5ஜி (Redmi 17 5G) ஸ்மார்ட்போனை தற்போது சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் பல நாடுகளில் அறிமுகமாகும். இப்போது ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (Redmi 17 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

சக்திவாய்ந்த 6என்எம் யுனிசாக் டி8300 ஆக்டா-கோர் (6nm Unisoc T8300 octa-core) பிராசஸர் உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3 மூலம் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
13எம்பி ரியர் கேமரா உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.
6300எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 15W சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த ரெட்மி போனின் எடை 210 கிராம் ஆகும். கோல்ட் மிஸ்ட் ப்ளூ, ஸ்டார் ராக் பிளாக் மற்றும் ஃபெதர் மிஸ்ட் ஒயிட் கலர்களில் இந்த போனை வாங்கலாம்.
ரெட்மி 17 5ஜி விலை
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17 5ஜி மாடலின் விலை 999 Yuan (இந்திய மதிப்பில் ரூ.14,085) ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17 5ஜி மாடலின் விலை 1199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.16,905) ஆக உள்ளது.
photo credits: redmi, gizmochina


Click it and Unblock the Notifications