அடுத்த மாதம் களமிறங்கும் புது Redmi 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 18-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக ரெட்மி 17 5ஜி அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ரெட்மி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் இந்த போனில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி 17 5ஜிஅம்சங்கள் (Redmi 17 5G Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Snapdragon 4 Gen 4 chipset) உடன் இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதுவும் 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன. 8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரெட்மி 17 5ஜிஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் 7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. மேலும் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications