அறிமுகமானது புதிய ரெட்மி 5ஜி போன்.. 7900எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17 5ஜி (Redmi 17 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 7900எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளியாகி உள்ளது. இப்போது ரெட்மி 17 5ஜி போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (Redmi 17 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 825 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 16.7 மில்லியன் கலர்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குவால்காம் ஆக்டா கோர்ட ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட்(Qualcomm's octa-core Snapdragon 4 Gen 5 chipset) உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.
HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.
ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் 7900எம்ஏஎச் பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 232 கிராம் ஆகும்.
ரெட்மி 17 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17 5ஜி மாடலின் விலை ரூ.23,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 17 5ஜி மாடலின் விலை ரூ.26,999-ஆக உள்ளது.
வரும் செப்டம்பர் 10-ம் தேதி அமேசான் மற்றும் எம்.காம் போன்ற தளங்களில் இந்த புதிய ரெட்மி போன் விற்பனைக்கு வரும். அப்சல்யூட் பிளாக் (Absolute Black), எண்ட்லெஸ் ப்ளூ (Endless Blue) மற்றும் எடர்னல் ஆரஞ்சு (Eternal Orange) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications