Home
Mobile

செப்டம்பர் 3-ல் சம்பவம் இருக்கு.. 7900mAh பேட்டரி.. 50MP கேமரா.. வருகிறது புது ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 17 5ஜி (Redmi 17 5G) ஸ்மார்ட்போனை வரும் செப்டம்பர் 3-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (Redmi 17 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 800 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

செப்டம்பர் 3-ல் சம்பவம் இருக்கு.. வருகிறது புது ரெட்மி 5ஜி போன்..

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Snapdragon 4 Gen 5) சிப்செட் உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ரெட்மி போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மூலம் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளன.

செப்டம்பர் 3-ல் சம்பவம் இருக்கு.. வருகிறது புது ரெட்மி 5ஜி போன்..

7900எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் இந்த போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.

5ஜி, வைஃபை 5, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த ரெட்மி போனின் எடை 210 கிராம் ஆகும். ஆரஞ்சு, ப்ளூ மற்றும் பிளாக் நிறங்களில் இந்த புதிய ரெட்மி போனை வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் ரூ.20,000-க்கு கீழ் அறிமுகமாகும்.

Best Mobiles in India

English summary
Redmi 17 5G price and specifications revealed ahead of launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X