அடுத்த ரெட்மி 5ஜி போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. IP64 ரேட்டிங்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 17 5ஜி (Redmi 17 5G) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது மலேசியாவின் SIRIM சான்றிதழ் தளத்தில் 26062RN92G என்ற மாடல் நம்பர் உடன் இந்த ரெட்மி போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இப்போது ஆன்லைனில் கசிந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி 17 5ஜி அம்சங்கள் (Redmi 17 5G Specifications): 7500எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியுடன் இந்த புதிய ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியும் இந்த போனில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
50எம்பி ரியர் கேமரா உடன் இந்த ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இந்த புதிய ஸ்மார்ட்போனில் உள்ளது.
மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளியாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அதேபோல் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும். 5ஜி, 4ஜி எல்டிஇ, வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குறைந்த எடையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரெட்மி 17 5ஜி ஸ்மார்ட்போன் கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும். மேலும் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications