மொத்த மார்கெட் மிரளுது.. 7500mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி 17 4ஜி (Redmi 17 4G) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, கேமரா, பேட்டரி, சிப்செட் உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் கசிந்து, மார்கெட்டை அதிரவிட்டுள்ளது. பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் பீச்சர்களை பேக் செய்ய இருக்கிறது. இந்த ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போனின் விவரங்கள் இதோ.
ஓரிரு மாதங்களில் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் முதலில் எதிர்பார்க்கலாம். பிறகு இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன்களில் விலை உயர்வு காரணமாக 4ஜி மாடல்கள் மீது எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இதில் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மிரளவிடுவதால், எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது.

டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) அவரது எக்ஸ் தளத்தில் முழு பீச்சர்கள் அடங்கிய பட்டியலை போஸ்ட் செய்துள்ளார். இதில் டிசைன், கலர் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமல்லாமல், சிப்செட் முதல் பேட்டரி வரையில் பீச்சர்களும் வெளியாகி இருக்கின்றன. ரேம் மற்றும் மெமரி வேரியண்ட்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
4 ஜிபி ரேம் + 129 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களுடன் இந்த ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. மேலும், 6 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கொடுத்துள்ளது. ஆகவே, 12 ஜிபிக்கான ரேம் அவுட்புட் கொண்ட மடாலாக இருக்கிறது. மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்க உள்ளது.
ரியல்மி 17 4ஜி அம்சங்கள் (Redmi 17 4G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 675 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 825 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. டிசி டிம்மிங் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொண்ட மாடலாக இந்த ரியல்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.
1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை பேக் செய்துள்ளது ஆக்டா கோர் மீடியாடெக் ஜி91 அல்ட்ரா 12என்எம் (Octa Core MediaTek Helio G91 Ultra 12nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (HyperOS 3) கிடைக்கிறது. 45W டர்போ சார்ஜிங் கொண்ட 7500mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.8 எம்எம் தடிமன் மற்றும் 232 கிராம் எடை கொண்டுள்ளது. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. சைடு-ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) கிடைக்கிறது.
ஐபி64 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஓக் கிரீன் (Oak Green), டீப் ப்ளூ (Deep Blue), பிளாக் (Black) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் வெளியாக இருக்கிறது. பட்ஜெட்டில் வெளியாகும் என்பதால், ரூ.15,000 முதல் ரூ.20,000 விலைக்குள் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications