Home
Mobile

செம்ம டிமாண்ட்.. பட்ஜெட்ல 7500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

குளோபல் மார்கெட்டில் ரெட்மி 17 4ஜி (REDMI 17 4G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட்டில் கிடைக்க இருப்பதால், இந்திய மார்கெட்டிலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சொல்லப் போனால், இந்திய மார்கெட்டில் டிமாண்ட் ஏற்படும்படியான பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் இதோ.

சீன மார்கெட்டில் ரெட்மி நோட் 17 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகிய பிறகு, இந்திய மார்கெட்டில் வெளியாகியது. இப்போது, அதேபோல குளோபல் மார்கெட்டில் வெளியாகிய ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் ஓரிரு வாரங்களில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது. 7500mAh பேட்டரி, 45W சார்ஜிங் போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது.

செம்ம டிமாண்ட்.. பட்ஜெட்ல 7500mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா!

ரெட்மி 17 4ஜி அம்சங்கள் (REDMI 17 4G Specifications): 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 675 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா (12nm MediaTek Helio G91 Ultra) சிப்செட்டை கொடுத்துள்ளது. ஆர்ம் மாலி ஜிபியு கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலும் வெளியாகி இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. 1080p ரெசொலூஷன் எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் டூயல் கேமரா ரெக்கார்டிங் (Dual Camera Recording) கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஹைப்பர் ஓஎஸ் 3 (Hyper OS 3) கிடைக்கிறது. 7500mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது.

22.5W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) மற்றும் ஏஐ பேஸ் அன்லாக் (AI Face Unlock) கிடைத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Splash, Water & Dust Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், விர்ச்சுவல் ப்ராக்சிமிட்டி சென்சார் (Virtual Proximity Sensor) உள்ளது.

ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.17,000 பட்ஜெட்டில் இருக்கிறது. இந்தியாவில் மலிவான விலைக்கு எதிர்பார்க்கலாம். பிளாக் (Black), டீப் ப்ளூ (Deep Blue), ஓக் கிரீன் (Oak Green) மற்றும் லோட்டஸ் பர்பிள் (Lotus Purple) கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
REDMI 17 4G With 50MP Camera 7500mAh Battery Launched For Global Market Expect Soon in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X