Home
Mobile

ரெட்மி களமிறக்கும் புதிய போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

தற்போது பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் 5ஜி போன்களை விட 4ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில் ரெட்மி நிறுவனமும் விரைவில் 4ஜி போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது ரெட்மி 17 4ஜி போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

தற்போது இந்த ரெட்மி 17 4ஜி (REDMI 17 4G) ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் படங்கள் வெளியாகி உள்ளன. அதுவும் டூயல் ரியர் கேமரா மற்றும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி போன். இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி களமிறக்கும் புதிய போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

ரெட்மி 17 4ஜி அம்சங்கள் (REDMI 17 4G Specifications): 6.9-இன்ச் எச்டி டிஸ்பிளே உடன் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் ஹீலியோ ஜி91 அல்ட்ரா சிப்செட் (MediaTek's Helio G91 Ultra chipset)உடன் இந்த ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

6ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி உடன் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் இதில் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய ரெட்மி 4ஜி போன் வெளிவரும். அதேபோல் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor)வசதியும் இந்த புதிய ரெட்மி 17 4ஜி போனில் இருப்பதாக கூறப்படுகிறது.

வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. 200 இன்ச்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?வீட்டுக்குள் ஒரு 4K மினி தியேட்டர்.. 200 இன்ச்.. ஆண்ட்ராய்டு ஓஎஸ்.. புதிய ப்ரொஜெக்டர் அறிமுகம்.. எந்த மாடல்?

7500எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி 17 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

டீப் ப்ளூ, பிளாக், கிரீன் மற்றும் பர்ப்பிள் நிறங்களில் இந்த போன் வெளியாகும். 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 17 4ஜி போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: YTECHB.com

Best Mobiles in India

English summary
REDMI 17 4G images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X