வெச்சி செஞ்சாச்சி.. ரூ.13,000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் பட்ஜெட் விலை மாடலான ரெட்மி 15ஆர் 5ஜி (Redmi 15R 5G) ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பதால், இந்த மாடலை ரீபிராண்ட் வெர்ஷனில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டில் 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் கொண்ட இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி 15ஆர் 5ஜி அம்சங்கள் (Redmi 15R 5G Specifications): இந்த ரெட்மியில் 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 810 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு வெட் டச் 2.0 (Wet Touch 2.0) சப்போர்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் (டைப்-சி போர்ட்) கொடுக்கிறது. இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரியில் ஆரம்ப மாடல் வருகிறது.
மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் மாடலும் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ரெட்மியில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) வருகிறது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டும் 7.99 எம்எம் தடிமன் மட்டுமே இருக்கிறது. 205 கிராம் எடை கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் +128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,555ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.19,719ஆகவும் இருக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.20,952ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,356ஆகவும் நிர்யணம் செய்யப்பட்டு இருக்கிறது.
சீன மார்கெட்டில் முதலில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அதன் பிறகு குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போனில் கிளவுட் ஒயிட் (Cloud White), லைம் கிரீன் (Lime Green), டிவைலைட் ப்ரபிள் (Twilight Purple) மற்றும் ஸ்டார் ராக் பிளாக் (Star Rock Black) ஆகிய கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
இந்தியாவில் வெளியான ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








