தூள் கிளப்பும் Redmi.. மலிவு விலை.. 6000mAh பேட்டரி.. 256ஜிபி மெமரி.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனம் விரைவில் ரெட்மி 15ஆர் 5ஜி (Redmi 15R 5G) எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மற்ற நாடுகளில் இந்த போன் அறிமுகமாகும். இந்நிலையில் இந்த புதிய ரெட்மி 15ஆர் 5ஜி போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 15ஆர் 5ஜி அம்சங்கள் (Redmi 15R 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரமான டைமன்சிட்டி 6300 எஸ்ஒசி (Dimensity 6300 SoC) சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த சிப்செட். அதேபோல் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
HyperOS 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மர்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதி இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது.
13எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உடன் இந்த போன் வெளிவரும்.
6000mAh பேட்டரி உடன் ரெட்மி 15ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போன் நாள் முழவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. எனவே இந்த போனின் பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.
டைட்டானியம் பர்பிள், ஸ்டார் ராக் பிளாக், லைம் கிரீன் மற்றும் கிளவுட் ஒயிட் நிறங்களில் இந்த போன் வெளியாகும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ரெட்மி 15ஆர் 5ஜி போன் கம்மி விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications