வெச்சி செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.10,475 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி பிரியர்களில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு பக்காவான மாடலாக ரெட்மி 15சி (REDMI 15C) வெளியாகி இருக்கிறது. 6000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்செட் கொண்ட இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரெட்மி 14சி ஸ்மார்ட்போன் பட்ஜெட் வெளியாகி மிகுந்த வரவேற்பு பெற்றது. ஆனால், இது இந்தியாவுக்கு வருவதற்கு முன்பு குளோபல் மார்கெட்டில் வெளியாகியது. இப்போது, அதேபோல அடுத்த வெர்ஷனான ரெட்மி 15சி குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஓரிரு வாரங்களில் எதிர்பார்க்கலாம்.

ரெட்மி 15சி அம்சங்கள் (REDMI 15C Specifications): இந்த ரெட்மியில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா (Octa Core MediaTek Helio G81 Ultra) சிப்செட் கிடைக்கிறது. மொத்தம் 4 வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. இதுபோக கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது.
6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 810 எச்பிஎம் மோட் கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் அக்சலரி லென்ஸ் (Auxiliary Lens) கிடைக்கிறது. இந்த கேமராவில் 1080p ரெசொலூஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
மேலும், பிலிம்கேமரா (filmCamera) மோட் கிடைக்கிறது. இதுபோக எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) மற்றும் டைம்-லேப்ஸ் (Time Lapse) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதில் 1080p வீடியோ ரெக்கார்டிங் உள்பட மெயின் கேமராவில் கிடைத்த பீச்சர்களும் வருகின்றன.

இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 31 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜிங் செய்து கொள்ளலாம். இந்த பெரிய பேட்டரி இருந்தும், 7.99 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆனால், 205 கிராம் எடை வருகிறது. இதில் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கிடைக்கிறது.
IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போனில் மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), மிட்நைட் பிளாக் (Midnight Black), மிட்நைட் கிரீன் (Mint Green) மற்றும் ட்வைலைட் ஆரஞ்ச் (Twilight Orange) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கிறது. இதுவொரு 4ஜி மாடலாக இருப்பதால், டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது.
இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ரூ.10,475 ஆரம்ப விலையில் கிடைக்க இருக்கிறது. இந்திய மார்கெட்டில் ரெட்மி 14சி (Redmi 14C) ஸ்மார்ட்போன் வெளியாகிவிட்டது. ஆகவே, இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் வெளியாக வாய்ப்புள்ளது, அதிக பேட்டரி கேபாசிட்டி வருவதால், நல்ல வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications