இதுதான் புது ரெட்மி போன்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?
ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 15சி ஸ்மார்ட்போனை விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த புதிய ரெட்மி போனின் முக்கிய விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி 15சி அம்சங்கள் ( Redmi 15C Specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி81 எஸ்ஒசி (MediaTek Helio G81 SoC) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக 6.9-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
அதுவும் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட்மி 15சி ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)ஆதரவு இந்த ரெட்மி 15சி ஸ்மார்ட்போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்லைட் ப்ளூ (Moonlight Blue), பிளாக் (Black), பிங்க் (Pink) மற்றும் கிரீன் (Green) நிறங்களில் இந்த புதிய போன் வாங்க கிடைக்கும்.
4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.4, வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி போனில் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.13,400 விலையில் இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Photo Credit: Epto.it


Click it and Unblock the Notifications








