Home
Mobile

டிசம்பர் 3-க்கு அப்புறம் இதுக்குத்தான் மவுசு.. பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 33W சார்ஜிங் மாடல்!

ரெட்மி நிறுவனத்தின் பட்ஜெட் மாடலான ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி தெரிய வந்துள்ளது. ரெட்மி இந்தியா நிறுவனம் இதை உறுதி செய்துள்ளது. கூடவே, விற்பனை விவரங்களும் தெரிய வந்துள்ளதால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை விரும்பும் கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருப்பதால், பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகும் என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால், பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் விவரங்களை தெரிவிக்கவில்லை. இருப்பினும், அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டிருப்பதால், அதில் விற்பனைக்கு வருவது உறுதியாகும்.

டிசம்பர் 3-க்கு அப்புறம் இதுக்குத்தான் மவுசு.. பட்ஜெட்ல புது ரெட்மி!

அதேபோல குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருப்பதால், அந்த பீச்சர்களே இதில் பெரும்பாலும் கிடைக்க இருக்கிறது. ஆகவே, குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். மேலும், ஏற்கனவே, இந்திய மார்கெட்டில் வெளியான ரெட்மி 14சி மாடலின் விலையை பார்க்கலாம். இதைவிட கொஞ்சம் கூடுதல் விலைக்கே ரெட்மி 15சி 5ஜி வெளியாகும்.

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G Specifications): 6.9 இன்ச் டிஸ்பிளேவுடன் 1600 x 720 ரெசொலூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 810 நிட்ஸ் எச்பிஎம் மோட் கொண்டுள்ளது. 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கிடைக்கிறது.

4ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களும் கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் வேரியண்ட்களை எதிர்பார்க்கலாம். அதேபோல 8ஜிபி ரேம் வேரியண்ட்டும் கிடைக்கும். இதில் வழக்கமாக கொடுக்கப்படும் விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கிடைக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்டை இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மேலும், மாலி ஜி57 எம்சி2 கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. 50 மெகாபிக்சல் மெயின் கேமரா கிடைத்துள்ளது. செகண்டரி லென்ஸ் மற்றும் எச்டிஆர் மோட் கொடுக்கிறது. மேலும், நைட் மோட், ஆட்டோ நைட் மோட், போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.

8 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது. 6000mAh பேட்டரியையும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டும் கிடைக்கிறது. சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது. என்எப்சி மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. IP64 தர வாட்டர் ரெசிஸ்டன்ஸை கொண்டுள்ளது. இந்த ரெட்மி 15சி 5ஜி மாடலின் பட்ஜெட்டை தெரிந்து கொள்ள 14சி 5ஜி மாடலை பார்க்க வேண்டும்.

ரெட்மி 14சி 5ஜி அம்சங்கள் (Redmi 14C 5G Specifications): 6.88 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட்டுடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கிடைக்கிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

மேலும், 5160mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.9,999ஆகவும், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.11,999ஆகவும் இருக்கிறது. ஆகவே, ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் ரெட்மி 15சி 5ஜி மாடல் கிடைக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15C 5G With 6000mAh Battery Launching in India on December 3 Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X