Home
Mobile

ஆர்டர் பொளந்து கட்டும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மட்ட ரேட்ல வருது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இப்போது, பேட்டரி, கேமரா, டிஸ்பிளே மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. இந்த ரெட்மி 15சி 5ஜி போனின் விவரங்களை பார்க்கலாம்.

குளோபல் மார்கெட்டில் வெளியான இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் டிசம்பர் 3ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த தளத்தில் வெளியீட்டுக்கு முன்பே பேட்டரி, கேமரா, டிஸ்பிளே மற்றும் கலர் விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன.

ஆர்டர் பொளந்து கட்டும்.. 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. மட்ட ரேட்ல!

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G Specifications): 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது. டியூவி ரெய்ன்லேண்ட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 6000mAh பேட்டரி கிடைக்கிறது. 1000 சைக்கிள்கள் டியூரபிலிட்டி உள்ளது.

அப்போதும், 80 சதவீத கேபாசிட்டியில் பேட்டரி ஹெல்த் இருக்கும். மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyberOS 2) கிடைக்க இருக்கிறது. இதில் சர்க்கிள் டூ சர்ச் (Circle to Search) மற்றும் ஜெமினி ஏஐ (Gemini AI) சப்போர்ட் கிடைக்கிறது. 50 மெகா பிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.

டூயல் ஏஐ கேமரா (Dual AI Camera) செட்டப் கொடுக்கிறது. டஸ்க் பர்பிள் (Dusk Purple), மூன்லைட் ப்ளூ (Moonlight Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே அமேசான் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன. குளோபல் வேரியண்ட்டின் அடிப்படையில் மற்ற பீச்சர்களும் தெரியவந்துள்ளன.

ஆகவே, இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொண்டுள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்ஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) மற்றும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மூன்று வேரியண்ட்கள் கிடைக்க இருக்கிறது.

இதில் 4 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும், 6 ஜிபி ரேம் வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், 8 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட் விவரங்கள் அதிகாரப்பூர்வமானது கிடையாது. மார்கெட்டில் கசிந்து விலைகளாகும்.

இருப்பினும், முன்னதாக வெளியான ரெட்மி 14சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை பார்க்கையில், மேற்கண்ட பட்ஜெட்டில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ரெட்மி 14சி 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆகவும், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15C 5G With 6000mAh Battery 50MP Camera Confirmed Ahead of India Launch Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X