ஆர்டர் பொளக்கப் போகுது.. ரூ.11,500 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் பட்ஜெட் விலை மாடலாக களமிறங்க இருக்கும் இந்த ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனின் ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் கசிந்துவிட்டன. அடிமட்ட பட்ஜெட்டில் கிடைக்கும் 5ஜி மாடலாக இருக்கப் போவதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. வெளியீட்டு தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், ஓரிரு வாரங்களில் களமிறங்க இருக்கிறது. இதை உறுதி செய்யும்படி பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஏற்கனவே குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், பீச்சர்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், பட்ஜெட் விவரங்கள் இந்திய மார்கெட்டில் கசியாமல் இருந்து வந்தது. இப்போது, டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav) அவரது எக்ஸ் தளத்தில் ரேம் + மெமரி மட்டுமல்லாமல், விலை விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார். ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் 3 வேரியண்ட்கள் கிடைக்க இருப்பதாக டிப் கொடுத்துள்ளார். இந்த விலைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி 15சி 5ஜி விலை (Redmi 15C 5G Price)
4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.11,500ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,500ஆகவும் இருக்கப் போகிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,500ஆக இருக்கப் போகிறது. குளோபல் மார்கெட்டில் வெளியான இந்த வெர்ஷனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G Specifications)
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்க இருக்கிறது. 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. இதில் 1080p ரெசொலூஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. மேலும், ஃபிலிம் கேமரா, எச்டிஆர் மோட், நைட் மோட் மற்றும் போர்ட்ராய்டு மோட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.
8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இதிலும் நைட் மோட், எச்டிஆர் மோட் போன்ற பீச்சர்கள் மற்றும் 1080p ரெசொலூஷன் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட ஸ்பிளாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் கிடைக்கிறது.
இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் மிட்நைட் பிளாக் (Midnight Black), மின்ட் கிரீன் (Mint Green) மற்றும் டஸ்க் பர்பிள் (Dusk Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இது குளோபல் வேரியண்ட்டின் பீச்சர்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களாக இருக்கிறது. இந்தியாவில் இதே பீச்சர்கள் மற்றும் கலர்களை எதிர்பார்க்கலாம். ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








