பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டு.. ரூ.12000 பட்ஜெட்ல புது Redmi போன்.. 5ஜி, 6000mAh பேட்டரி, 50MP AI கேமரா!
ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனை நாளை, டிசம்பர் 3 ஆம் தேதி இந்தியாவிற்கு வர உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமான ஒரு நாள் கூட முழுதாக இல்லை. ஆனாலும் கூட இந்த ஸ்மார்ட்போனின் பல அம்சங்கள் இன்னும் மறைக்கப்பட்டடுள்ளன. இந்நிலையில் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ரெட்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட், டிஸ்பிளே மற்றும் பேட்டரி விவரங்களுடன் சேர்த்து இது மூன்று வண்ணங்களில் இந்தியாவில் வாங்க கிடைப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. கூடவே இது ஒரு சதுர வடிவ கேமரா செட்டப்பை கொண்டிருக்கும் என்பதும் டீஸ் செய்யப்பட்டு உள்ளது.

ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனிற்கான அமேசான் மைக்ரோசைட் ஆனத இது 50-மெகாபிக்சல் டூயல் ஏஐ கேமரா செட்டப் உடன் வரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது கடந்த செப்டம்பரில் அறிமுகமான இதே ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் உள்ளதை போலவே இருக்கிறது. க்ளோபல் வேரியண்ட் ஆனது 50-மெகாபிக்சல் (எப் /1.8) ப்ரைமரி கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமராவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 329.7 மணிநேர காத்திருப்பு நேரம், 106.9 மணிநேர மியூசிக், 28.9 மணிநேர இன்ஸ்டாகிராம் ஸ்க்ரோலிங் மற்றும் 23.1 மணிநேரம் வரை யூடியூப் வீடியோ ஆகியவற்றை வழங்குவதாக கூறப்படுகிறது.
வேறு என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?
- 6.9-இன்ச் டிஸ்பிளே
- 120Hz வரை அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட்
- "நாள் முழுவதுமான கண் வசதிக்காக" TUV ரைன்லேண்ட் சான்றிதழ்
- மீடியா டெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட HyperOS 2 ஸ்கின்
- Circle to Search போன்ற பல்வேறு AI அம்சங்கள்
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இந்தியாவில் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499 இல் தொடங்கும் என்று கூறப்படுகிறது, இது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாக இருக்கலாம். அறிமுகத்திற்கு பின்னர் அமேசான் மற்றும் சியோமி ஆன்லைன் ஸ்டோர் வழியாக டஸ்க் பர்பிள், மூன்லைட் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய கலர்களில் விற்பனைக்கு வரும்.
ரெட்மி 15சி 5ஜி க்ளோபல் வேரியண்ட்டின் விரிவான அம்சங்கள்: இது 6என்எம் செயல்பாட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது, 2.4GHz இல் இரண்டு பெர்பார்மென்ஸ் கோர்களும் 2.0GHz இல் ஆறு பெர்பார்மென்ஸ் கோர்களும் உள்ளன. இது ஒரு பவர்ஹவுஸ் அல்ல, ஆனால் குறைந்த சக்தியை பயன்படுத்தி தினசரி மொபைல் பயன்பாடுகள் மற்றும் லைட் கேம்களை சிறப்பாக இயக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.9-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை (120Hz LCD Display) கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 50எம்பி பிரைமரி சென்சார் உள்ளது மற்றும் முன் பகுதியில் 8எம்பி செல்ஃபி ஷூட்டர் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் 33W சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரியும் உள்ளது. ஆனால் ஸ்மார்ட்போன் ரீடெயில் பாக்ஸில் எந்த சார்ஜரும் சேர்க்கப்படவில்லை. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐபி64 ஸ்பிளாஸ் ப்ரொடெக்ஷன் (IP64 Splash Protection), சில பகுதிகளில் என்எப்சி (NFC), ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ரீடர் ஆகியவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








