Home
Mobile

அறிமுகமானது புது Redmi 5ஜி போன்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய ரெட்மி போனின் விலை, விற்பனை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 660 நிட்ஸ் பிரைட்னஸ், டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது Redmi 5ஜி போன்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி..

தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ரெட்மி போனில் உள்ளது.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.

ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack),எஃப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது.

அறிமுகமானது புது Redmi 5ஜி போன்.. ரூ.12,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி..

6000mAh பேட்டரி உடன் ரெட்மி 15சி 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

12ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 15சி 5ஜி போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.13,999 விலையிலும், 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,499 விலையிலும் வாங்க முடியும். டஸ்க் பர்பிள், மூன்லைட் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. வரும் டிசம்பர் 11-ம் தேதி முதல் அமேசான், எம்ஐ.காம் மற்றும் சியோமி ஆஃப்லைன் கடைகளில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15C 5G launched in India: check specifications, price, sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X