பட்டிதொட்டியெல்லாம் பறக்கும் ஆர்டர்.. 6000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் இப்போது Amazon Mega Deal Days Sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 43 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.750 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் (Redmi 15C 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் உடன் இந்த ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபுயு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ரெட்மி போனில் உள்ளது.
6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ்,120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate), 660 நிட்ஸ் பிரைட்னஸ், டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்டுள்ளது மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளன.
ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
அதேபோல் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளன.
அதுவும் 6000mAh பேட்டரி உடன் ரெட்மி 15சி 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), எஃப்எம் ரேடியோ (FM Radio) உள்ளிட்ட வசதிகள் இந்த போனில் உள்ளன. பின்பு இந்த போன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications