Home
Mobile

அதிர போகுது மார்க்கெட்.. 50MP கேமரா.. 6000mAh பேட்டரி.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் வரும் ஆகஸ்ட் 19-ம் தேதி ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 15சி 5ஜி (Redmi 15C 5G) எனும் ஸ்மார்ட்போனையும் இந்நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி 15சி 5ஜி அம்சங்கள் ( Redmi 15C 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி 15சி 5ஜி அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1600 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிர போகுது மார்க்கெட்.. வருகிறது புதிய ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன 6எஸ் ஜென் 3 (Qualcomm's Snapdragon 6s Gen 3) சிப்செட்வ வசதியுடன் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

4ஜிப ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி வசதியுடன் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

6000mAh பேட்டரி வசதியுடன் ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா உடன் இந்த புதிய ரெட்மி போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதி ரெட்மி 15சி 5ஜி ஸ்மார்ட்போனில் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)ஆதரவு இந்த ரெட்மி போனில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரெட்மி ரெட்மி 15சி 5ஜி போனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

photo credit: xpertpick

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15C 5G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X