REDMI செம்ம போடு.. ரூ.12999 க்கு 6300mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. IP52 ரேட்டிங்.. எந்த மாடல்?
ரெட்மி 15ஏ 5ஜி (REDMI 15A 5G) ஸ்மார்ட்போனானது, இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. பட்ஜெட் விலைக்கு 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 7.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொடுத்து உள்ளது. மேலும், 120Hz டிஸ்பிளே, IP52 ரேட்டிங் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு பட்ஜெட் பிரியர்களிடையே வரவேற்பு உள்ளது. ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் பல்வேறு மாடல்களை தொடர்ந்து களமிறக்கி வருகிறது. இப்போது, ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனை அதிக பேட்டரி கேபாசிட்டி விரும்பும் பிரியர்களுக்காக களமிறக்கி இருக்கிறது. 1000 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கொடுக்கிறது.

இந்த பட்ஜெட்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்கும் நேரத்தில் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல ஓஎஸ் பாலிசியிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து உள்ளது.
ரெட்மி 15ஏ 5ஜி அம்சங்கள் (REDMI 15A 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core Unisoc T8300 6nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 810 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி, 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கிடைக்கிறது.
32 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. 8.15 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொண்டுள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.
ரெட்மி 15ஏ 5ஜி விலை ( REDMI 15A 5G): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆகவும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆகவும் இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் எம்ஐ.காம் (Mi.com) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 3ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க உள்ளது. அவ்சம் ப்ளூ (Awesome Blue), அமேஸ் பர்பிள் (Amaze Purple) மற்றும் ஏஸ் பிளாக் (Ace Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மலிவான விலைக்கு லேட்டஸ்ட் ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருக்கும் ரெட்மி பிரியர்களுக்கு இது பக்கா தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








