வெளுத்து கட்டும் விற்பனை.. ரூ.12,999 பட்ஜெட்ல REDMI 5G போன்.. 6300mAh பேட்டரி.. 32MP கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி 15ஏ 5ஜி (REDMI 15A 5G) ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. பட்ஜெட் விலையில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 6300mAh பேட்டரி, 32 எம்பி கேமரா மற்றும் ஆக்டா கோர் 5ஜி சிப்செட் கொடுத்துள்ளது. 4 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட்களையும் கொடுக்கிறது. இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 21 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.13,499 விலைக்கு கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,999 விலையில் வாங்கி கொள்ளலாம். மேலும், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலுக்கு 19 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.14,499 விலைக்கு கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலுக்கு 18 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.16,499 விலைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கும் ரூ.500 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். அவ்சம் ப்ளூ (Awesome Blue), அமேஸ் பர்பிள் (Amaze Purple) மற்றும் ஏஸ் பிளாக் (Ace Black) ஆகிய மூன்று கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ரெட்மி 15ஏ 5ஜி அம்சங்கள் (REDMI 15A 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core Unisoc T8300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட் விலையிலும். 4 வருடங்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுத்துள்ளது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.
சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) மற்றும் பட்ஜெட் மாடல்களுக்கு கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது.
660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது. எப்/2.0 அபெர்சர் கொண்ட 32 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6300mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த விலைக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமே கிடைக்கும். ஆனால், இதில் 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் வருகிறது. 210 கிராம் எடை கொடுத்துள்ளது. மேலும், சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த ரெட்மி போனுக்கு உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications