ஏப்.3 க்கு அப்புறம் SALE சும்மா தெறிக்கும்.. ரூ.12000 பட்ஜெட்ல 6300mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?
ரெட்மி 15ஏ 5ஜி (REDMI 15A 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்க இருக்கிறது. நம்ப முடியாத பட்ஜெட்டில் 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 120Hz டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மார்ச் 27ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகிய இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை (ஏப்ரல் 2 ஆம் தேதி) தொடங்குகிறது. பட்ஜெட்டில் பெரிய பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போனை தேடிக் கொண்டிருந்தால், இது பக்கா ஆப்ஷாக இருக்கிறது. 6300mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கிறது.

4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.12,999ஆகவும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,499ஆகவும் இருக்கிறது. மேலும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட டாப்-எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆக இருக்கிறது. இந்த விலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.650 தள்ளுபடி கிடைக்கிறது.
ஆகவே, ரூ.12,349 ஆரம்ப விலைக்கு வாங்கி கொள்ளலாம். கூடுதலாக ஈஎம்ஐ சலுகையையும் பெற்று கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அவ்சம் ப்ளூ (Awesome Blue), அமேஸ் பர்பிள் (Amaze Purple) மற்றும் ஏஸ் பிளாக் (Ace Black) ஆகிய 3 கலர்களில் இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது.
பேட்டரி மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு பாலிசியிலும் மிரளவிட்டுள்ளது. ஏனென்றால், லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மட்டுமல்லாமல், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு 2 ஜெனரேஷன் மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால், இதில் டபுள் மடங்காக கொடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல சியோமி ஹைப்பர்ஓஎஸ் 3.0 (Xiaomi HyperOS 3.0) மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுத்து உள்ளது. 1000 சார்ஜிங் சைக்கிள்களுக்கு பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த்தை இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் உறுதி செய்துள்ளது. ரிவர்ஸ் சார்ஜிங் கிடைப்பதால், ஹெட்போன், இயர்பட்ஸ்களை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ரெட்மி 15ஏ 5ஜி அம்சங்கள் (REDMI 15A 5G Specifications): எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.9 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 660 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் ஃபிளிக்கர் ப்ரீ சர்டிபிகேஷன் கொடுத்து உள்ளது.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட் எதிர்பார்க்க முடியவில்லை. ஆக்டா கோர் யுனிசோக் டி8300 6என்எம் (Octa Core Unisoc T8300 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிடைக்கும் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
32 எம்பி மெயின் கேமரா உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி ஷூட்டர் கொடுக்கிறது. 15W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6300mAh பேட்டரி பேட்டரி உள்ளது. மேலும், 7.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 8.15 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்து உள்ளது. IP52 ரேட்டிங் மற்றும் சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் உள்ளது.


Click it and Unblock the Notifications








