Home
Mobile

SALE ஆரம்பம்.. சத்தியமா ரூ.12999 தான்.. 6300mAh பேட்டரி புது Redmi 5ஜி போன்.. நம்பி வாங்க நச்சுனு 4 காரணங்கள்!

ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் துணை பிராண்ட் ஆன ரெட்மி (Redmi) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனாக அறிமுகமான ரெட்மி 15ஏ 5ஜி (Redmi 15A 5G) மாடலின் இந்திய விற்பனை தொடங்கியுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எங்கே வாங்குவது? யாரெல்லாம் இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்? இதோ விவரங்கள்:

ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்தியாவில் ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதே ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன்களும் உள்ளன. அந்த மாடல்களில் விலைகள் முறையே ரூ.14,499 மற்றும் ரூ. 16,499 ஆகும்.

SALE ஆரம்பம்.. ரூ.12999 தான்.. 6300mAh பேட்டரி புது Redmi 5ஜி போன்!

ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள்: ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஏஸ் பிளாக், ஆசம் ப்ளூ மற்றும் அமேஸ் பர்பிள் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையார்கள் இந்த புதிய ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் (Flipkart), எம்ஐ.காம் (Mi.com) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஷாவ்மீ ரீட்ரியில் ஸ்டோர்களில் வாங்கலாம்.

ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டூயல் சிம் (Dual SIM) வசதி கொண்ட ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையிலான ஷாவ்மீயின் ஹைப்பர்ஓஎஸ் 3 ஓஎஸ் (HyperOS 3) கொண்டு இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு 4 ஆண்டுகள் வரை ஆண்ட்ராய்டு அப்டேட்ஸ் மற்றும் 6 ஆண்டுகள் செக்யூரிட்டி பேட்ச்கள் கிடைக்கும் என்று ரெட்மி உறுதியளிக்கிறது. பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இதில் கூகுள் ஜெமினி (Google Gemini), சர்க்கிள் டு சர்ச் (Circle To Search) மற்றும் சியோமி இன்டர்கனெக்டிவிட்டி (Xiaomi Interconnectivity) போன்ற ஏஐ அடிப்படையிலான அம்சங்கள் (AI Features) உள்ளன.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 60Hz, 90Hz மற்றும் 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.9-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்க்ரீன் 240Hz வரையிலான டச் சாம்பிளிங் ரேட்டையும் ஆதரிக்கிறது மற்றும் 800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்கும் என்று ரெட்மி கூறுகிறது.

சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன், 6என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசாக் டி8300 5ஜி சிப் உடன் வருகிறது. இது மாலி-ஜி57 ஜிபியு, 6ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது, அதே நேரத்தில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக ஸ்டோரேஜை 2TB வரை விரிவாக்கவும் முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் எப்/2.0 அபெர்ச்சர் மற்றும் ஒரு சிங்கிள் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 32 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் 8-மெகாபிக்சல் கேமரா உள்ளது.

தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாப்பை வழங்கும் IP52 ரேட்டிங் உடன் வரும் ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி, வைஃபை, ப்ளூடூத் 5.4, GPS/A-GPS, 3.5மிமீ ஆடியோ ஜாக், USB OTG மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் வழங்குகிறது

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 15W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 6,300mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த பேட்டரி 7.5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஒரே சார்ஜில் 2 நாட்கள் வரை இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

OPINION - ரெட்மி 15ஏ 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? 4 காரணங்கள் - பெரிய டிஸ்பிளே, சவுண்ட் ஆன ஸ்பீக்கர்கள், நம்பகமான பேட்டரி லைஃப் மற்றும் நீண்ட கால சாஃப்ட்வேர் ஆதரவு ஆகியவற்றுடன் கூடிய ஒரு பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போனை விரும்புபவர்களுக்கு ரெட்மி 15ஏ மாடல் மிகவும் பொருத்தமானதாக தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் - தி பெஸ்ட் சிப்செட் அல்ல. எனவே இன்னும் பெட்டர் ஆன பெர்பார்மென்ஸ் தேவைப்படும் பயனர்கள் மற்ற ஸ்மார்ட்போன் களை பரிசீலிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக, இது ஒரு "சமச்சீரான" ஸ்மார்ட்போன் ஆகும்; குறிப்பாக ரூ.13,000 க்குள் என்கிற பட்ஜெட்டில். அதில் எந்த சந்தேகமும் இல்லை!

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15A 5G India Sale Started Price Starts Rs 12999 Who Can Buy This Phone Without Any Hesitation
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X