Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர்.. பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 50MP AI கேமரா.. Redmi-யின் புது 5G போன்.. ஆக.28 முதல் SALE!

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆக ரெட்மி 15 5ஜி (Redmi 15 5G) மாடல் இன்று (ஆகஸ்ட் 19) இந்தியாவில் அறிமுகமானது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இந்த ஸ்மார்ட்போன் 33W சார்ஜிங்கிற்கான ஆதரவு உடனான 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன் வருகிறது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Qualcomm Snapdragon 6s Gen 3) சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

ஆளுக்கு 1 ஆர்டர்.. பட்ஜெட்டில் 7000mAh பேட்டரி, 50MP AI கேமரா!

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பயனர்களின் கண்களை பாதுகாப்பதற்கான மூன்று TÜV Rheinland சான்றிதழ்களை பெற்றுள்ளது. கூடவே இது 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான டிஸ்பிளேவை கொண்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் ரியர் கேமரா உள்ளது.

மேலும் ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2.0 உடன் வருகிறது. இதன்கீழ் கூகுள் ஜெமினை (Google Gemini) மற்றும் சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) போன்ற ஏஐ (AI) அம்சங்கள் அணுக கிடைக்கிறது.

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.15,999 மற்றும் ரூ.16,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் அமேசான் இந்தியா (Amazon India), ஷாவ்மீ இந்தியா (Xiaomi India) வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது Frosted White, Midnight Black மற்றும் Sandy Purple ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும்.

ரெட்மி 15 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 144 ஹெட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 288 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1080 × 2340 பிக்சல்ஸ்
- 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- லோ ப்ளூ ஒளி, ஃப்ளிக்கர் ஃபிரீ மற்றும் சர்க்காடியன்-பிரெண்டலி தரநிலைகளுக்கான TÜV ரைன்லேண்ட் சான்றிதழ்கள்

- 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம்
- 256ஜிபி வரையிலான UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் உடனான ஹைப்பர்ஓஎஸ் 2.0
- 2 வருட மேஜர் ஓஎஸ் அப்டேட்
- 4 வருட செக்யூரிட்டி அப்டேட்
- கூகுள் ஜெமினை மற்றும் சர்க்கிள் டு சர்ச் போன்ற ஏஐ அம்சங்கள்

- ஏஐ ஆதரவுடன் கூடிய டூயல் ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- ஏஐ ஸ்கை (AI Sky), ஏஐ பியூட்டி (AI Beauty) மற்றும் ஏஐ ஏரேஸ் (AI Erase) போன்ற ஏஐ அம்சங்கள்
- டால்பி ஆல் சான்றளிக்கப்பட்ட ஸ்பீக்கர்ஸ்

- 33W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh சிலிகான்-கார்பன் பேட்டரி
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- ஐஆர் பிளாஸ்டர்
- 5ஜி, 4ஜி
- ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ்
- யூஎஸ்பி டைப்-C போர்ட்
- அளவீட்டில் 168.48×80.45×8.40மிமீ
- எடையில் 217 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi 15 5G with 7000mAh Battery 50MP AI Camera Launched Price Rs 14999 India Sale Starts Aug 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X